சாலையோரக் கடையில் கூழ் - டிஜிட்டல் பேமண்ட் தென் சென்னையில் தமிழிசையின்"ரவுண்ட் அப்"

0 379

தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வேளச்சேரி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது சாலையோர கடையில் கேழ்வரகுக் கூழ் அருந்திவிட்டு, யூபிஐ மூலம் பணம் செலுத்தினார்.

அடுக்குமாடி குடியிருப்பு வாளகம் ஒன்றில் பிரச்சாரம் செய்யச் சென்ற தமிழிசையிடம், மழைக்காலத்தில் தாங்கள் சந்திக்கும் சவால்கள், பாதை பிரச்சனை உள்ளிட்டவை குறித்து குடியிருப்புவாசிகள் முறையிட்டனர். அவர்களின் குறைகளை குறிப்பெடுத்துக்கொண்ட தமிழிசை சௌந்தரராஜன், வெற்றி பெற்ற பின் உறுதியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

ஆளுநராக ராஜ்பவனில் பெரிய மேசையில் அமர்ந்து சாப்பிடுவதை விட, இதோ இவர்களது வீட்டுக்குள் சென்று சாப்பிடுவதில் மகிழ்ச்சி என அங்கு நின்றிருந்த தூய்மைப் பணியாளர்களை கைகாட்டினார். தூய்மைப் பணியாளர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநர் பதவியை தாம் மதிப்பதாகவும் அதில் ராஜ வாழ்க்கை இருந்தாலும் மக்களோடு மக்களாக தோளில் கைபோட்டு பழகவோ, ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணவோ முடியாது என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments